| கர்நாடகா : மீண்டும் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் சாவு | |
| |
| கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று மீண்டும் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் பலியானார்கள் ; 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் அருந்திய 100 க்கும் அதிகமானோர் பலியான நிலையில், கர்நாடகத்தை ஒட்டியுள்ள ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45 பேர் பலியாகினர். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள்வதற்குள்ளாகவே , கர்நாடாகாவில் இன்று மீண்டும் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 15 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று இந்த கள்ளச்சாராய சாவு நிகழ்ந்திருப்பதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. இது தொடர்பான மேலும் விவரம் எதிர்பார்க்கப்படுகிறது. |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment