Saturday, April 12, 2008

வரதட்சணை தராததால் இந்து மனைவியின் கண்களை தோண்டிய இந்து கணவன்

வரதட்சணை தராததால் மனைவியின் கண்களை தோண்டிய கணவன்

நகரி, ஏப். 12-

ஒரிசா மாநிலம் ரூர்கே லாவை அடுத்த கோபிநாத்பூரை சேர்ந்தவர் பிருந்தாவன் இவரது மனைவி துளசி.

திருமணத்தின் போது வரதட்சணையாக 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் தருவதாக துளசியின் பெற்றோர் உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் 15 பவுன் நகைதான் மகளுக்கு போட முடிந்தது.

இதையறிந்ததும் பிருந் தாவன் ஆவேசமானார். "மீதி நகையை ஒரு வாரத்தில் கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் உன்னை உயிருடன் கொளுத்தி விடு வேன்'' என்று மிரட்டினார்.

ஆனாலும் துளசியின் பெற்றோரால் ஒரு வாரத்தில் 5 பவுன் நகை கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று பிருந்தாவன் துளசியை வரதட்சணை கேட்டு அடித்து உதைத்தார். பின்னர் துளசியை கட்டி வைத்து கத்தியால் அவரது 2 கண்களையும் தோண்டி எடுத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். அங்கு ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பிருந்தாவன் தப்பி ஓடினார்.

கண்களை இழந்த துளசி தற்போது அங்குள்ள ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி போனோரு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிருந்தாவனை தேடி வருகிறார்கள். வரதட் சணைக்காக கணவன், மனைவியின் கண்களை தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

No comments:

Post a Comment