Thursday, April 17, 2008

கருணாவிற்கு 9 மாத கால சிறைத் தண்டனை

கருணாவிற்கு

9 மாத கால சிறைத் தண்டனை

 


போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்ட விநாயகமூர்த்தி மு

 

image ரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு பிரித்தானிய நீதிமன்றம் 9 மாத கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மேற்கு லண்டனின் ஐல்வேர்க்கில் உள்ள நீதிமன்றத்தில் கருணா அம்மான் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அடையாள அட்டை சட்டத்தின் கீழ், மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட கருணா மீது, போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, பிரித்தானியாவிற்குள் உட்பிரவேசித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கருணா அம்மான் ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே, பிரித்தானியாவில் அரசியல் புகலிடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தண்டனைக் காலத்தின் பின்னர் இந்த வேண்டுகோள் பரிசீலிக்கப்படவுள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

No comments:

Post a Comment