Sunday, December 2, 2012

முகம்மதுவும் மற்ற நபிமார்களும்

 



அலி சினாவின் கவனத்திற்கு,            

உங்களுடைய இணைய தளத்திலுள்ள உங்களுடைய கருத்துக்களை சும்மா படித்தேன். கீழ்க்கண்ட கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அவற்றை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.            

1. முஹம்மதுவுடைய பணியில் நீங்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் பிறகு மோசஸ், ஆப்ரஹாம் தாவீத், இயேசு &முகம்மதுவுக்கு பிறகு வந்தவர்களான, கடவுள் ஒருவரே என்று முஹம்மது கூறியதையே கூறியவர்கள் யார், அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
மோசஸ், ஆப்ரஹாம், இயேசு போன்றவர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது முஹம்மது ஒரு கபட வேடதாரி என்ற உண்மைக்கு சம்பந்தமில்லாதது.
முகம்மதுவுக்கு பிறகு வந்தவர்களை பற்றி கேட்கிறீர்கள்.  எந்த மற்றவர்கள்? ஒன்று முஹம்மது பொய்யராக இருந்தார் அல்லது இந்த மற்றவர்கள்தான். தனக்கு பிறகு எந்த நபியும்(தீர்க்கதரிசி) வரமாட்டார் என்று முஹம்மது உரிமை கோரினார். முஹம்மதுக்கு வக்காலாத்து வாங்கி வாதம் புரிவதன்மூலம் அவருக்கு பின்பு வந்த அனைவரையும் நீங்கள் தானாகவே புறந்தள்ளி விட்டீர்கள்.

படத்திலிருந்து(Picture) முகம்மதை
  வெளியே எடுத்து விடுங்கள். நீங்கள் இப்பொழுதும் மற்ற எல்லா மதங்களிலும் நம்பிக்கை கொள்ள முடியும். படத்தில் அவர் இருந்தால், அவருக்கு பின்பு வந்த எல்லோருடைய உண்மையையும் நீங்கள் மறுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல்,  எவர்களை தான் பின்பற்றுவதாக அவர் உரிமை பாராட்டினாரோ அவர்களிடமிருந்து முஹம்மதின் போதனைகளும் செயல்களும் மிகவும் வேறுபட்டு இருந்ததால், அவருக்கு முன்பு வந்தவர்களின் ஏற்புத்தன்மையையும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டியிருக்கும்.


  அல்லாஹ் என்பது உண்மையான பெயர் இல்லை. அது "அரசர்" அல்லது "அதிபர்" என்பதை போன்ற ஒரு பட்டம் தான். அது உறுதிப்படுத்தும் வார்த்தையான அல்(Al / The / அந்த) மற்றும் இலாஹ்(Ilah) என்பவற்றை கொண்டது.அதற்கு கடவுள் என்று அர்த்தம். கஅபா வில் இருந்த ஹபல் (ஹுபல்) என்ற சந்திரக் கடவுளையே அது குறித்தது.

எலிசபெத் II ஐ "ராணி" என்ற அவருடைய பட்டப்பெயரால் பிரிட்டிஷ் மக்கள் அழைப்பதை போலவே, அரபியர்களும் ஹபலை அதனுடைய பட்டப்பெயரால் அழைத்தனர். ஆனாலும், ஹபலும் (Habal)  யாவேஹ்வும்(Yaweh) ஒன்றல்ல.அது ஹ(Ha) மற்றும் பால் (Baal) ஆகியவற்றை கொண்டு அமைகிறது. எபிரேயுவில்  ஹ(Ha)  என்பது உறுதிபடுத்தும் சொல்.   பால் (Baal) என்பது பொய்யான கடவுள் என்று பைபிளில் நிராகரிக்கப்படுகிறது.  ஹபால் பைபிளில் கண்டனம் செய்யப்படும் மோவாபியர்களின்(Moabites) கடவுள்.

சந்திரக் கடவுள் ஹபால் தான் அரபியர்களின் அல்லாஹ் என்ற உண்மையானது பிறை (Crescent) இஸ்லாமின் அடையாளக்குறி என்பதில் ஆதாரமாக விளங்குகிறது.


அரபி பேசும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் கூட கடவுளை அல்லாஹ் என்றே அழைத்தனர். ஆனால் அரபியர்களின் அதே கடவுளை அவர்கள் அர்த்தம் பண்ணிகொள்ளவில்லை. யாவேஹ் என்ற இஸ்ரவேலின் கடவுளையே அவர்கள் அர்த்தம் கொண்டனர். பல்வேறு ராஜ்யங்களில் உள்ள மக்கள் தங்கள் முடிவேந்தர்களை  "அரசர்" என்று அழைக்கின்றனர். ஆனால் ஒரே முடிவேந்தர்களை அவர்கள் எண்ணிக் கொள்வதில்லை. அதேமாதிரிதான்,இஸ்ரவேலின் அல்லாஹ்வும் அரபியர்களின் அல்லாஹ்வும் இரு வேறு தெய்வங்கள்.
வஞ்சகத்தின் அடுக்குகளில் உங்களுடைய கேள்வி ரகசியமாக ஒளிந்திருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்களா?இஸ்லாத்தை ஆராய்வது என்பது வெங்காயத்தை உரிப்பதுபோல் ஆகும். ஒரு அடுக்கை நீங்கள் நீக்கும் பொது இன்னொன்றை நீங்கள் காண்கிறீர்கள். அடக்கத்திலோ ஒன்றுமே இல்லை.               

எந்த வகையிலும், கடவுள் ஒரு நபர்(Person) என்று நான் கருதவில்லை. அது நம்முடைய விஷயங்களில் தலையிடுகிறது, நம்முடைய பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறது அல்லது தூதர்களையோ அல்லது ரட்சகர்களையோ அனுப்புகிறது என்று நான் கருதவில்லை. கடவுள் ஒரு நபராக இருந்தால், இயற்கை பேரழிவுகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்தும் அவர் நம்மை காப்பாற்றியிருக்க முடியும் அல்லது வேண்டும்.
2. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் -- நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், உங்களை பொறுத்தவரை உங்களுடைய கடவுள் யார்(கடவுளின் இருப்பில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால்).

பல பில்லியன் வருடங்கள் பரிணாமத்தின் உற்பத்தி பொருட்கள் நாம்.
3. உங்களை பொறுத்தவரை, எல்லா ஜீவராசிகளையும் யார் படைத்து இருக்கிறார், இயற்கையாக நிகழ முடியாத இந்த சிக்கலான ஒன்றை.       

எல்லா சிக்கலான விஷயங்களும் இயற்கையாக நிகழக்கூடியவைகள் தான். நோவாவின் (நூஹ்) பேழை என்ற கதையை நம்பும் படைப்புவாதிகளோடு நான் விவாதித்திருக்கிறேன். நோவா தன்னுடைய பேழையில் எப்படி அத்தனை உயிரினங்களை அடைக்க முடிந்தது என்ற கேள்வியை எதிர்நோக்கியபோது, நோவாவின் வெள்ளத்திற்கு பிறகு சிறிய அளவிலான பரிணாமங்களும் பன்மைப்படுத்தல்களும் நிகழ்ந்தன என்று அவர்கள் கூறுகின்றனர்.உதாரணத்திற்கு, புலிகளும் சிங்கங்களும் அப்பொழுது ஒரே உயிரினமாக இருந்தன என்பது. இது கேலிக்குரியது.நோவாவின் வெள்ளம் 5000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பூமியின் வாழ்நாளில் இது ஒரு கண் சிமிட்டல்தான். இந்த குறுகிய காலத்தில் இந்த அளவு வேறுபாடு அடைதல் சாத்தியமில்லாதது. இந்த சாத்தியமற்றதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் பாக்டீரியாவிலிருந்து நானூறு கோடி வருடங்களில் மனிதர்கள் பரிணமித்தார்கள் என்று நாம் கூறும்போது அவர்கள் காலை பின்வாங்குகிறார்கள். சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள்,சிறுத்தை புலிகள் மற்றும் மற்ற பூனை போன்ற விலங்குகள் பந்தேரா(Panthera) என்ற ஒரே இனத்தின் உறுப்பினர்களே. அவைகளுடைய பொதுவான மூதாதை முன்பு 
 ஐம்பது  லட்சம் வருடங்களுக்கு குறைவான  காலத்திற்குள் வாழவில்லை. அவைகளுக்கு இடையேயான மாற்றங்கள் குறைந்தது ஐம்பது லட்சம் வருடங்களில் நிகழ்ந்தன, ஐந்தாயிரம் வருடங்களில் அல்ல.
4. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மற்ற எந்த மதத்தை காட்டிலும் இஸ்லாத்தின் வரலாறு தெளிவாக உள்ளது.  

அது மிக தெளிவாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். முஹம்மது மேல் ஏற்றிக் கூறப்பட்ட பல பொய்யான ஹதீத்கள் உள்ளன. ஆனால் உண்மையான ஒன்றிலிருந்து அவைகளை பிரித்தெடுப்பது மிக சுலபமானதே.முஹம்மதின் உண்மையான வரலாற்றை நான் கட்டமைத்துள்ளேன். அவருடைய வன்முறை மனநோய்த்தனமான
 மனதை(Psychopathic mind) கூர்ந்து பார்த்துள்ளேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றின் தெளிவான தன்மைக்கு நன்றிகள் உரித்தாகுக.
5. கடைசியாக, நீங்கள் மரணிக்கும்போது உங்களுடைய ஆத்துமா எங்கே செல்லும் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.        

நன்கொடைகளை திரட்டும் உங்களுடைய இடைவிடாத அட்டவணையிலிருந்து சிறிது நேரத்தை எடுத்துக்கொண்டு நான் மேலே வைத்துள்ள விஷயங்களை பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.

தங்களுக்கு நன்றி,       
எஸ்.வாட்சன் 
லண்டன் 

உங்களுடைய மூன்றாவது கேள்வியை போன்றே, இது கேள்வியையே மன்றாடி வேண்டி கேட்டுக்கொள்வது என்று தர்க்க சாஸ்திரத்தில்(Logic) அறியப்படுகின்ற தவறான வாதம்(Fallacy)
  ஆகும். அதில் வாத அடிப்படைகள்(Premises) முடிவு செய்யப்பட்டதே (Conclusion)  உண்மை என்ற உரிமை கோருதலை கொண்டவை.

மூன்றாவது கேள்வியில், "... இந்த சிக்கலான விஷயங்கள் இயற்கையாக நிகழ முடியாது" என்று நீங்கள் உறுதிபடுத்தினீர்கள். அந்த வாதத்தின் அடிப்படையே(Premise) தவறானது. சிக்கலான விஷயங்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அது காலத்தை பற்றிய கேள்விதான். பல நூறு  கோடி வருடங்கள்(Billions of years) என்பது நீண்ட காலம். சின்னஞ்சிறு மாற்றங்கள் கூடுகின்றன. பல பத்து லட்ச(Millions of tiny changes) சின்னஞ்சிறு மாற்றங்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்குகின்றன. 

ஐந்தாவது கேள்வியில், ஆத்துமா இருக்கிறது, தொடர்ந்து ஜீவிக்கிறது என்று நீங்கள் அனுமானித்து அது எங்கே செல்கிறது என்று என்னை கேட்கிறீர்கள். நாம் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து, இந்த ஆத்துமா என்பது உள்ளதா என்றும் அது தொடர்ந்து ஜீவிக்குமா என்றும் கேட்போம். அந்த கேள்விகள் பதிலளிக்கப்பட்டவுடன், அது எங்கே செல்கிறது என்ற கேள்வியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.       

உடலை சாராமல் ஆத்துமா இருக்கிறதா? எனக்கு தெரியாது! அது இருக்க முடியும் என்பதை நான் மறுக்கவில்லை.ஆனால் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. அது ஒரு நம்பிக்கை (Belief) சார்ந்த விஷயம். நான் நம்பிக்கை சார்ந்த மனிதன் இல்லை. ஆத்துமாக்கள் தொடர்ந்து ஜீவிக்க கூடும் என்று நீங்கள் நம்பக்கூடும். அதனோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் உங்களோடு ஒத்துபோகவோ அல்லது மாறுபடவோ முடியாது. நான் சந்தேகவாதியாகவே (Skeptic) இருக்கிறேன்.

இப்பொழுது, ஆத்துமா தொடர்ந்து ஜீவிக்கும் என்று அனுமானித்துக் கொள்வோம். சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய முஹம்மதின் சித்தரிப்பு உண்மையானதாக இருக்க முடியாது என்பது நிச்சயமானது. பெரும்பாலான மக்கள் அதை புரிந்து கொள்வதை போன்று ஆவி உலகத்தை பற்றிய புரிதல் முகம்மதுவுக்கு இருந்ததில்லை. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை குறித்த அவருடைய கருத்துரு(Concept)  ஸ்தூலமான(Physical), இந்த உலகத்துக்குரியதாகவே இருந்தது.அவருடைய சுவர்க்கம் என்பது வேசிகளும், பானங்களும், உணவுகளும், எல்லா வகையான விபச்சாரத்தனங்களும் சிற்றின்ப சந்தோஷங்களும் நிறைந்தது. அவருடைய நரகமும் கூட சித்திரவதையும் கொடூர வேதனையும் கொண்ட ஸ்தூலமான இடமே(Physical place).
நான் ஒரு முஸ்லிம் என்றும் என்னுடைய அன்புக்குரியவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் வைத்துக்கொள்வோம்.காபிர்களாக (உண்மையை மறைப்பவர்கள் என்பது நேரடி பொருள்) இறந்துபோன என்னுடைய அன்புக்குரியவர்கள் நரகத்தில் எரிந்துகொண்டிருக்கும்போது சுவர்கத்தில் உடலுறவு கொள்வதை, அருந்துவதை, உண்பதை என்னால் ஆனந்தமாக அனுபவிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! எனக்கு அதுவே நரகம். மாறாக, நான் அவர்களுடன் இருந்து அவர்களுடைய வலியையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்வேன்.

ஆனால் முகம்மதுவால் அவ்வளவு தூரம் பார்க்க முடியவில்லை. இதை அவரால் காணமுடியாததற்கு  காரணம் என்னவெனில், அவர் தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநோயாளியாக (Narcissist) வும் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மையை (Empathy) இழந்தவராகவும் இருந்தார். மற்றவர்களின் வலிகளை அவர் உணராததால் மற்றவர்களும் அவைகளை உணர்ந்து கொள்வதில்லை என்று அவர் அனுமானித்துக் கொண்டார்.வருத்தமான விஷயம், அவருடைய நீர்க்குமிழி பிரபஞ்சத்தில் மாட்டிக்கொண்டவர்களும் கூட தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநோயாளிகளாக(Narcissists) வும்  மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி அல்லது நியூ ஆர்லியன்ஸில் ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் மக்கள் இறக்கும்போது,முஸ்லிம்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வை புகழ்கின்றனர்.அவர்களுடைய அவநம்பிக்கைக்காக அல்லாஹ் அவர்களை தண்டித்திருக்கிறார் என்று அவர்கள் நினைக்கின்றனர். எந்த மாதிரியான மனிதர்கள் இப்படி மனிதத்தன்மை அறவே இல்லாதவர்களாக  இருக்க முடியும்?முஹம்மதுடைய பெருங்குடலின் பகுதிகளாக முஸ்லிம்கள் ஆகிவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் நரகம் மற்றும் சுவர்க்கம் பற்றிய அவருடைய காட்சியில் எந்த தவறையும் காண்பதில்லை. தன்னை நம்பாததற்காக அவ்வளவு துன்புறுத்தி இன்பம் காணும் வகையில் மனிதர்களை என்றென்றைக்குமாக எரிக்கின்ற ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு ஒருவர் உண்மையாகவே முட்டாள்தனமாகவோ அல்லது இதயத்தில் தீமை கொண்டவராகவோ தான் இருக்க முடியும். மூளையை பயன்படுத்தாமல் தங்களுக்கு இட்ட கட்டளைப்படி மட்டுமே செயல்படுபவர்களாக(Zombies) முஸ்லிமாக சுருக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுடைய மனசாட்சியை இழந்துவிட்டிருக்கிறார்கள்.

எந்த வகையிலும், ஒவ்வொரு ஆன்மீக குருவும் அவருடைய/அவளுடைய சொந்த நற்குணத்தை கொண்டே ஆராயப்படவேண்டும். புத்தர், இயேசு, முஹம்மது மற்றும் டேவிட் கோரேஷ் ஆகியவர்களை ஒன்றாக சேர்த்து கட்டி அவர்கள் அனைவர் மேலும் ஒரே தீர்ப்பை நாம் வழங்க முடியாது. டேவிட் கோரேஷும் முகம்மதுவும் மிகத் தீமையான சீக்கு பிடித்த தனி மனிதர்கள்.    

மூல ஆசிரியர் : அலி சினா     
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்


--
http://thamilislam.tk

Friday, October 12, 2012

ஹிஜ்ரத்

 
கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம். புதிய சகாப்த்தம் என்று அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறது. ஆம், முஹம்மதின் வாழ்கை, ஹிஜ்ரத்திற்குமுன் ஹிஜ்ரத்திற்குப்பின் என்று முரண்பட்ட இரண்டு பகுதிகளாக காணப்படுகிறது. ஹிஜ்ரத்திற்குமுன் அவரது செயல்களில் கற்பனையாக உளறிக் கொண்டிருந்தது மற்றும் குழந்தை ஆயிஷாவுடன் திருமணம் என்பதைத் தவிர குறைகாண வேறொன்றுமில்லை. அல்லாஹ்வின் அனுமதி என்ற பெயரில் அவர், வன்முறையாளராக பெரும் அளவிலான குற்றச்செயல்களை நிகழ்த்தியது ஹிஜ்ரத்திற்குப் பின்னர்தான். மக்கா நகரத்து குரைஷியர்களால் முஹம்மது மற்றும் அவரது அடியார்களின் உயிருக்கு மிகப்பெரும் அச்சுருத்தல் ஏற்பட்டதாலேயே ஹிஜ்ரத் நிகழ்ததென்றும், அவர்களுக்கு பதிலடிகொடுக்கவே வேறுவழியின்றி தாக்குதல்களும், சூறையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதாக கூறும் அதேவேளையில், அல்லாஹ்வின் அறிவுறுத்தல் அல்லது ஆணை காரணமாகவே முஹம்மதுவும், அவரது சீடர் குலாமும், தங்களது தாயகமான மக்கா நகரை பிரிந்து செல்ல நேர்ந்தது என்று முரண்பாடகவும் கூறுவார்கள்.
இஸ்லாமியர்களின் கூற்றுப்படி, முஹம்மதிற்கு ஆதரவாக இருந்த அபூதாலிப், சீமாட்டி கதீஜா ஆகியோரின் மரணத்திற்குப்பிறகு அவரது வாழ்க்கையும், பொருளாதார நிலைமையும் கேள்விகுறியாகிறது. இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 264 ஆயிரம் கோடி மதிப்புடைய சீமாட்டி கதீஜாவின் செல்வம் முழுவதையும் இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்து ஓட்டாண்டியாகிவிடுகிறார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதுவைப்பற்றி வர்ணனை செய்யும் பொழுது அவர் குறைஷிகளின் கூட்டத்திலேயே மிகச்சிறந்த பண்பாளர், நம்பிக்கையாளர் "அல்அமீன்" என்றெல்லாம் கதையளப்பார்கள். ஆனால் குர்ஆனோ முஹம்மதிற்கு, குறைஷிகளிடையே அப்படியொன்றும் மகத்தான மரியாதை இருந்ததில்லை என்கிறது.
"இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுகின்றனர்.
(குர் ஆன் 43:31)
தங்களது கடவுளர்களை தரக்குறைவாக ஏசுகிறார் என்ற முறையில் முஹம்மதின் மீது மக்கத்து குறைஷிகளுக்கு கோபமிருந்திருக்கிறது அதை அபூதலிப்பிடம் தெரிவித்திருந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு மக்காவில், முஹம்மதின் உயிருக்கு அச்சுருத்தல் இருந்ததா? முஹம்மது தரப்பில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில் இரண்டைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கூறிவிட்டு, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்...
(புகாரி 520)
ஃபாத்திமா மட்டும் அங்கு வரவில்லையென்றால் மூச்சுதிணறி முஹம்மது இறந்திருப்பார் என்று கண்ணீர்மல்க மதப்பரப்புரை செய்வதை நீங்கள் அறிவீர்கள். மற்றொரு ஹதீஸையும் பார்ப்போம்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது? என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன்...
(புகாரி 3678)
அபூதாலிப், மற்றும் சீமாட்டி கதீஜாவின் மரணத்திற்குப் பிறகு, மக்கத்து குரைஷிகளால் முஹம்மதின் உயிருக்கு பாதுகாப்பில்லாமல் இருந்ததெனக் கூறிக்கொள்வது அல்லாஹ்விற்கும், குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் எதிரானது. ஏனெனில் முஹம்மது, அல்லாஹ்வின் உயர்மட்ட பாதுகாப்பிலிருப்பவர்.  முஹம்மதிற்கு எதிராக சூழ்ச்சி செய்வதைக்கூட அனுமதிக்க முடியாதென்கிறது குர்ஆன்.       
… எனவே, நிச்சயமாக அவன், அவருக்கு முன்னாலும், அவருக்குப் பின்னாலும் பாதுகாவலரை நடத்துகிறான்
(குர் ஆன் 72:27)
தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்; அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்; அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடிப்பான்..
 (குர்ஆன் 16:45)
அபூதாலிப் அல்லது கதீஜா இருந்தாலும் இல்லையென்றாலும் அல்லாஹ்விவின் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இருக்க முடியாதல்லவா? ஆனால் இவர்களோ முஹம்மதிற்கு எதிராக, குறைஷிகள் கடுமையான தொல்லைகள் விளைவித்ததாகவும், கொலைசெய்ய முயன்றதாகவும், கூறுவதன் மூலம் அல்லாஹ்வை கையாலாகாத கடவுளாக மாற்றிவிட்டனர். மக்காவில் முஹம்மதிற்கு,  அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி ஹதீஸ் கூறுவதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?'' என்று கேட்டான். அப்போது "ஆம்' என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்'' என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்'' என்று சொன்னான்.
(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
இங்கு, முஹம்மதைத் தாக்கும் நோக்கில், அபூஜஹ்லால், நெருங்கக்கூட முடியவில்லை, மீறி நெருங்கியிருந்தால் அவனது உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்களாம். இதே அபூஜஹ்லும் அவரது நண்பர்களும் ஒட்டகத்தின் கருப்பை சவ்வுகளை முஹம்மதின் தோள்மீது இட்டபொழுதும், உக்பா பின் அபீமுஐத் போர்வையால் மூச்சு திணறுமளவிற்கு முஹம்மதின் கழுத்தை நெரித்த பொழுதும் எதுவும் நிகழவில்லை. பாதுகாப்பிற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட மலக்கு எங்கே போனது? அவர்களது உடல் உறுப்புகள் பிய்த்தெடுக்கப்படவில்லையே ஏன்? இதற்கான பதிலை இஸ்லாமியர்கள்தான் கூறவேண்டும். (அல்லாஹ்வின் நாட்டம் அல்லது திட்டப்படியே முஹம்மது யஸ்ரிப்(மதீனா) சென்றார் என்பதுதான் அவர்களது பதில்!)
சரி..! இப்படியொரு படுபயங்கரமான(!?) வானவர்களின் பாதுகாப்பு இருக்கையில், மக்காவை விட்டு எதற்காக ஓடவேண்டும்? மதீனாவாசிகளிடன் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்? அல்லது  இதே வானவர்கள் மதீனாவிற்கு வந்து பாதுகாக்கமாட்டாரா? ஹிஜ்ரத்தின் அவசியம்தான் என்ன? தனது ஏற்பாடுகளின் மீது அல்லாஹ்விற்கே நம்பிக்கையில்லையா?, அல்லது மலக்குகள் மனிதர்களைவிட மிகபலவீனமானவர்களா?.
ஹிஜ்ரத்திற்கு காரணம் என்னவென்று இப்படி மண்டை பிய்த்துக் கொள்ளவேண்டியதில்லை. மதீனாவில் தனக்கு ஆதரவு பெருகியிருப்பதாக முஹம்மது கருதினார் அதனால் மதீனா சென்றுவிட்டார் அவ்வளவுதான்.
முஹம்மது தன்னை அல்லாஹ்வின் தூரென்று அறிவித்துக் கொண்ட பத்தாம் ஆண்டில் தனது கொள்கைகளை மக்கா நகருக்கு வெளியிலிருப்பவர்களுக்கும் கூறத்துவங்குகிறார். ஹஜ்ஜின் காலம் துவங்கியவுடன் கஅபாவை வணங்க வந்த யஸ்ரிப்வாசிகளிடமும் தனது மதவியாபாரத்தை செய்கிறார். அது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்தது. அதன் பயனாக தனது விற்பனைப் பிரதிநிதிகளை யஸ்ரிப் என்ற மதீனாவில் நியமித்து வியாபாரத்தை வளர்த்தெடுக்கிறார். இந்நிலையில் கல்வியறிவு இல்லாத யஸ்ரிப்(மதீனா)வாசிகளுடன் அகபாவில் ரகசியமாக சந்தித்து இரண்டுமுறை ஒப்பந்தங்களையும் செய்துகொள்கிறார்.
முதல் ஒப்பந்தத்தில், தன்னைப் பற்றிய செய்தியை யஸ்ரிப்பில் பரப்ப ஏற்பாடு செய்கிறார். இதன் பயனாக முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுடன் இரண்டாம் ஒப்பந்தமும் ஏற்படுகிறது. இப்னு அப்பாஸ் அப்துல் முத்தலிப், முஹம்மதின் சார்பாக பேசுகிறார்.
"கஸ்ரஜ் கூட்டத்தினரே! முஹம்மது எங்கள் மக்களிடம் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் இருக்கிறார். எனினும் அவர் உங்களுடன் இணைந்துவும், உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். அவரது பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவதாக இருந்தால் நீங்கள் அழைத்துச் செல்லலாம்" என்றார். கஅப் என்பவர் மதீனாவாசிகளின் சார்பாக உறுதிமொழி அளிக்கிறார்.
(இப்ன் ஹிஷாம்)
"O people of al-khazraj (the Arabs used the term to cover both Khazraj and Aus). You know what position Muhammad hold among us. We have protected him from our own people who think as we do about him. He lives in honour and safety among his people, but he will turn to you and join you. If you think that you can be faithful to what you have promised him and protect him from his opponents, then assume the burden you have undertaken. But if you think that you will betray and abandon him after he has gone out with you, then leave him now. For he is safe where he is." …
(Page 203, Life of Muhammad a Translation of Ibn Ishaq's Sirat Rasul Allah By A.Guillaume)
மக்காவில் முஹம்மது,  தக்க பாதுகாப்புடன்தான் இருந்திருக்கிறார், அவராது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவே மதீனா செல்கிறார் என்பதை கவனிக்கவேண்டும். ஆனால், முஹம்மது ஹிஜ்ரத் செய்ததற்கு, அல்லாஹ் கூறும் காரணங்களை கவனித்துப் பாருங்கள்,
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
(குர்ஆன் 9:13)
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(குர் ஆன் 8:26)
முஹம்மதை குறைஷிகள் என்ன செய்தனர் என்பதில் அல்லாஹ்வினால் ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை போலும்!. மேலும் ஹிஜ்ரத்தின் பொழுது மக்காவில் 70-80 பேர்களே முஹம்மதை ஏற்றிருந்தனர்.
உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ  மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
(குர்ஆன் 8:30)
1.     மக்காவாசிகள் முஹம்மதை பிடித்து வைத்துக்கொள்ள சூழ்ச்சி செய்தனர்,
2.     மக்காவாசிகள் முஹம்மதை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர்,
3.     மக்காவாசிகள் முஹம்மதை மக்காவிலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி செய்தனர்.
அல்லாஹ் கூறும் இந்த மூன்று காரணங்களும் ஒன்றுக்கொன்று முரணானவைகள்.
1.     முஹம்மதை, மக்காவிலிருந்து வெளியேற்ற விரும்புபவர்கள், அவரை எதற்காக பிடித்து வைக்க வேண்டும்?
2.     முஹம்மது தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக பிடித்துவைக்க சூழ்ச்சி செய்பவர்கள், எதற்காக  அவரைக் கொல்வதற்காக சூழ்ச்சி செய்ய வேண்டும்?
3.     முஹம்மதை கொல்ல சூழ்ச்சி செய்பவர்கள், ஊரைவிட்டு எதற்காக வெளியேற்ற சூழ்ச்சி செய்ய வேண்டும்?
இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறானாம்! சர்வவல்லமையுடையதாக கூறிக்கொள்ளும் அல்லாஹ்விற்கு, மக்காவில் புகலிடம் அளிக்கவோ, பலப்படுத்தவோ முடியவில்லை. இதை அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதே சரியானது. இதனால்தான் அல்லாஹின் திட்டப்படியே முஹம்மது மதீனா சென்றார் என்றொரு சமாளிப்பை கூறுகின்றனர். அல்லாஹ் அளித்ததாக  கூறிக்கொள்ளும் தூய்மையானவைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும், இருப்பினும் அடுத்துவரும் பதிவுகளில் அதைப்பற்றி பார்க்கலாம். உண்மையில், முஹம்மதின் ஆதரவாளர்கள் அனைவருமே ஹிஜ்ரத் செய்வதை விரும்பினர் என்று கூறுவதற்கில்லை, அவர்களில் சிலருக்கேனும் விருப்பமில்லாமல் இருந்திருக்க வேண்டும், ஹிஜ்ரத் செய்வதற்காக எப்படியெல்லாம், கெஞ்சுகிறான், மிரட்டுகிறான் என்பதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
(குர் ஆன் 8:72)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்.
(குர் ஆன் 4:100)
.. உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும், உங்களையும் (ஊரை விட்டு) அவர்கள் வெளியேற்றினார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பைச் செலுத்துகிறீர்கள். நீங்கள் பகிரங்கப்படுத்தியதையும், மறைத்ததையும் நான் நன்கு அறிபவன். உங்களில் இதைச் செய்பவர் நேர்வழி தவறி விட்டார்.
(குர் ஆன் 60:1)
மக்காவாசிகளின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதைக்கூட எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தெளிபடக் கூறமுடியவில்லை. முன்னுக்குபின் முரணாக ஏதேதோ உளறுகிறான். தங்களை அடித்து விரட்டியவர்களிடம் எவனாவது இரகசியமாக அன்பைச் செலுத்துவானா? இருக்க முடியாது! அப்படியெனில் விரட்டப்பட்டதாகக் கூறுவது பொய்! குறைஷிகள் மக்காவைவிட்டு வெளியேறுபவர்களைத் தடுக்க முயன்றனர் என்பதே மெய்! ஹுதைபியா ஒப்பந்தத்திலும்கூட குறைஷிகள், தங்கள் தரப்பிலிருந்து முஹம்மதிடம் வருபவர்களை திருப்பி தங்களிடமே அனுப்பிட வேண்டுமென்ற நிபந்தனை விதித்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும், அடிமைகளும், போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே! அரேபியர்கள், அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை!  குறைஷிகள் அதையே செய்தனர்.
 முஹம்மதின் மக்கா வாழ்க்கையில் யூதர்கள் இடம்பெறவில்லை, எனவே பழி குறைஷிகளின் தலையில் போடப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது முஹம்மதிற்காக பரிந்து பேசிய அவரது பெரிய தந்தை இப்ன் அப்பாஸ், முஹம்மதையும், அவரது கூட்டத்தினரையும் அழிக்க அபூஜஹ்லுடன் இணைந்து பத்ருகளத்திற்கு வந்து,  முஹம்மதிடம் கைதியாக மாட்டிக்கொண்டதுதான் (முஹம்மதின் கதை, மிகவும் பலவீனமான திரைக்கதை! முன்னாள் சென்றால் கடிக்கிறது பின்னால் சென்றால் உதைக்கிறது)
முஹம்மதியர்களிடம், ஹதீஸ்கள் ஏன் இவ்வளவு கேணத்தனமாக, முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்றால் அது யூதர்களின் சதி என்பார்கள். சில வாரங்களுக்கு முன், இஸ்லாமிய அறிஞர்கள் சிலருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, "கற்றறிந்த உங்களைப் போன்ற ஆலீம்களே குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் பலவிதமாக குழப்பமாக பொருள் கூறிக்கொள்வது  ஏன்?" என்றேன். அதற்கு ஒரு ஆலீம் கூறினார், "இஸ்ரேலில், குர்ஆன், மற்றும் ஹதீஸ்களை தீவிரமாக ஆய்வு செய்வதற்கென்றே தனித்துறை ஒன்று செயல்படுகிறது. அங்கு நடைபெறும் மிக முக்கியமான பணி என்னவெனில், குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் தவறான, குதர்க்கமான பொருளையும், அதை முஸ்லீம்கள் மத்தியில் கூறும் போலி ஆலீம்களை உருவாக்கி, உலகம் முழுவதிலும் பரவச்செய்து குழப்பத்தை உருவாக்கி இஸ்லாமை அழிப்பதுதான் யூதர்களின் நோக்கம்" என்றார்.
நான், "நமது ஆலீம்களான ஜாகீர் நாயக், பீஜே, அப்துல்லா ஜமாலி, சம்ஸுதீன் காஸிமி, Dr.K.V.S. ஹபீப் முஹம்மது போன்றவர்களும் அந்த யூதர்களின் மதரஸாவில் படித்தவர்களோ?" என்றபொழுது அந்த ஆலீமின் முகத்தில் தெறித்த எரிச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்! கருத்து சொன்னால் கேட்கவேண்டும் ஆராயக்கூடாது. இதுதான் இஸ்லாம்!
 இவர்கள் இப்படியே தொடந்தால், இமாம்கள் அபூஅப்தில்லாஹ், அல்ஹஜ்ஜாஜ் போன்றவர்களின் வேடத்தில்கூட யூதர்கள் வந்தனர் என்று விரைவில் கூறிவிடுவார்கள் என்று நம்பலாம். அல்லாஹ்வின் மற்றொரு வஹீயான ஹதீஸ்களில் விதவிதமாக கைவரிசையை காட்டிய யூதர்கள், குர்ஆனை விட்டு வைத்திருப்பார்களா? நாம் ஹிஜ்ரத்தை தொடர்வோம்.
இவ்வாறாக யஸ்ரிப்(மதீனா)வாசிகள் தங்களது உயிரைகொடுத்து பாதுகாப்போம் என்று உறுதிமொழியளித்த பின்னர், தனக்குத் தக்கபாதுகாப்பு கிடைக்கும் என்று தெளிவடைந்த பிறகுதான் முஹம்மதிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அல்லாஹ்(!)விடமிருந்தும் அனுமதி வருகிறது. (இல்லாத) அல்லாஹ் எப்படியும் தன்னை பாதுகாப்பான் என்று குருட்டுத்தனமாக முடிவெடுத்து ஓடுவதற்கு அவரென்ன அப்பாவி முஹாஜிரா?
இல்லாத எதிரியைக் கண்டு அஞ்சி நடுங்கிய முஹம்மது, ஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு, கிபி 622 செப்டம்பர் 12ல் தனது நண்பர் மூளைசெத்துப்போன அபூபக்கர் துணையுடன் வீட்டிலிருந்து வெளியேறி கிபி 622 செப்டம்பர் 23ல் குபா சென்றடைந்தார். மதீனா வந்த பிறகும் முஹம்மதின் அச்சம் தீரவில்லை தனது கூடாரத்தை பாதுகாக்க இரவுநேர காவலுக்கும் ஏற்பாடுசெய்து கொள்கிறார். மலக்குகளின் பாதுகாப்பு என்னவாயிற்று? என்று குறுக்கு கேள்விகள் கேட்கக்கூடாது!

தஜ்ஜால்

source:iraiyillaislam.blogspot.in

--
http://thamilislam.blogspot.in
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails