இந்திய முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஜாகிர் நாயக் என்று காரணம் காட்டி விசா மறுக்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவராக அங்கீகரிக்கப்பட்டவர் என்றும், ஆனால் ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளளியிடுபவர் என்றும் ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார். இந்த நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். source:BBC | |||||
-- http://thamilislam.tk | |||||
Sunday, June 20, 2010
முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை!!
Saturday, June 19, 2010
குவைத் இளவரசர் சுட்டுக் கொலை: உறவினர் வெறிச்செயல்
குவைத் நாட்டு இளவரசர் ஷேக் பாசல் (52). கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இவர் தனது உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவி னர் அவரை துப்பாக்கியால் சிட்டார்.
இதனால் உயிருக்கு போராடிய அவரை துபாயில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த தகவலை குவைத் அரசு தெரிவித்துள்ளது. இதற் கிடையே, அவரை சுட்ட உறவினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பல முறை துப்பாக்கியால் சுட்டும் இவர் தப்பி விட்டார். தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12-வது அரசர், ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
source:maalaimalar
http://thamilislam.tk
Subscribe to:
Posts (Atom)
