Tuesday, September 13, 2011

குர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை? 114 அல்லது 116 ?

குர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை? 114 அல்லது 116 ?

 

சூரா ஹப்த் மற்றும் க்ஹல்

உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்

Surata al-Hafd and al-Khal'(from Ubayy ibn Ka`b's Qur'an codex)

குர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்‍ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய "உபை இப்னு கஅப் " என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்‍ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்‍ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது. 

இவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.

Surat al-Hafd

You (alone) we worship, 
and to You (alone) we pray and lie prostrate, 
and to You (alone) we proceed and have descendants. 
We fear Your torture and hope for Your mercy. 
Truly Your torture will overtake the infidels.

உன்னை (மட்டுமே) நாங்கள் வணங்குகிறோம் 
உன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம் 
உன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம் 
உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம் 
உண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்



Surat al-Hafd

O Allah, You (alone) we ask for help and forgiveness. 
We speak appreciatingly of Your goodness. 
Never do we disbelieve You. 
We repudiate and disbelieve anyone who follows immorality.

ஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும் மன்னிப்பையும் கேட்கிறோம் 
நாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம் 
நாங்கள் உன்னை மறுதலிக்கமாட்டோம் 
தீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.



மூலம்: 1) THE CODICES OF IBN MAS'UD AND UBAYY IBN KA'B 2) Surata al-Hafd and al-Khal'


மூல குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்: 

குர்‍ஆன் எப்படி தொகுக்கப்பட்டது, யார் யாரிடம் எத்தனை அத்தியாயங்கள் இருந்தன, எப்படி உஸ்மான் குர்‍ஆனை தொகுத்தார் மற்றும் அனேக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.

1. Evidence of Change Before 'Uthman

உஸ்மானின் தொகுப்பிற்கு முன்பு மூல குர்‍ஆனில் இருந்த மாற்றங்களுக்கான ஆதாரங்கள்

ஏன் உஸ்மான் மற்ற குர்‍ஆன் மூல பிரதிகளை அழித்துவிடும் படி விரும்பினார்? இதர குர்‍ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்‍ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார்? இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்‍ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை? உஸ்மான் தொகுத்த குர்‍ஆன் மற்றவர்களிடம் இருந்த குர்‍ஆனை விட உயர்ந்தது, தரம் வாய்ந்தது என்று நாம் எப்படி நம்புவது?

2. Evidence of Change After 'Uthman

உஸ்லாமின் தொகுப்பிற்கு பிறகும் குர்‍ஆனில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள்

3. Hadiths which say the Qur'an is incomplete

குர்‍ஆன் முழுமையற்ற புத்தகம் என்பதை நிருபிக்கும் ஹதீஸ்கள்

குர்‍ஆனின் சில வசனங்கள் தொலைந்துவிட்டன, மறக்கப்பட்டுவிட்டன மற்றும் இரத்து செய்யப்பட்டு விட்டன என்பதை காட்டும் குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள்.

Some Muslims are of the conviction spurious verses have been added:

4. Hadiths which refer to lost suras

தொலைந்துப்போன குர்‍ஆன் அத்தியாயங்கள்

தற்போதையை குர்‍ஆனில் இல்லாத அத்தியாயங்கள் பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. குர்‍ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறியலாம்.

5. Variants which exist in present-day manuscripts

நம்மிடமுள்ள குர்‍ஆன் கைப்பிரதிகளை ஒப்பிடும்போது காணப்படும் வேறுபாடுகள்

குர்‍ஆன் மூல கைப்பிரதிகளை ஒப்பிடும்போது, எல்லா மூல குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நிருபனமாகிறது. ஆக, குர்‍ஆன் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

Source: http://www.answering-islam.org/Quran/Text/index.html


--
http://thamilislam.tk

Friday, September 9, 2011

இவ்வார இணையதளம் : தினம் ஒரு சமையல்

சற்று வித்தியாசமாக, சமையல் செய்து உங்கள் குடும்பத் தினைரை அசத்த வேண்டுமா! குறிப்பாக நம் வழக்கமான உணவு முறை இல்லாமல், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள, நாம் கடந்த சில ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகின்ற உணவினைத் தயாரிக்க எண்ணுகிறீர்களா! உங்களுக்கென ஓர் இணைய தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பெயர் kitchendaily. இதன் இணைய முகவரி http://www.kitchendaily.com/.
இந்த தளம் சென்றவுடன் நம் கவனத்தைக் கவர்வது, வலது பக்கம் உள்ள கட்டுரை களே. பின்னர், உணவுப் பண்டங்களை எப்படி செய்வது, அதற்கான தயாரிப்பு முறை, தேவையான சமையல் பொருட்கள் மற்றும் பல தலைப்புகளில் நாம் பெறும் தகவல்களே. இவற்றுடன் தளம் மேலாக Main, Recipes, HowTo, Features, Chefs & Experts, Dinner Tonight, Holidays & Parties, Videos, and My Tools. என்ற பிரிவுகள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் அளப்பரிய தகவல்கள் உள்ளன. இவை எல்லாம் வழக்கமான தலைப்புகள் தானே என்று எண்ணினால் ஏமாற்றம் தான். உள்ளே ஒவ்வொரு உணவுப் பொருள் குறித்தும் தனித்தனியே தகவல்கள் உள்ளன. புரோட்டின் முதல் அனைத்து சத்தான உணவு குறித்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. HowTo என்ற சமைப்பதனைச் சொல்லித் தரும் பிரிவிலும் இந்த தகவல்கள் கிடைக்கின்றன. மேல் நாடுகளில் புகழ் பெற்ற சமையல் வல்லுநர்கள் நேரடியாகத் தரும் செயல் முறைகளும் இங்கு கிடைக்கின்றன. Dinner Tonight என்ற பிரிவில் தரப்படும் உணவுப் பண்டங்கள் வாராவாரம் மாற்றப்பட்டு, அவற்றிற்கான குறிப்புகள் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். 
நமக்கென்ன இருக்கப் போகிறது என்று எண்ணாமல், ஒருமுறை சென்று பார்க்கவும். பின்னர், இதனை ரசித்துப் பார்ப்பீர்கள்.
 

source:dinamalar

--
http://thamilislam.tk
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails