Monday, November 30, 2009

இன்டர்நெட் வசதி இல்லாத கிராமத்தின் பெயர் கூகுள்

 
  

Swine Flu

ரெய்ச்சூர் : கர்நாடகாவில் இன்டர்நெட் வசதியே இல்லாத கிராமத்தின் பெயர்  கூகுள்  என்ற ஆச்சரியமான விஷயம் தெரிய வந்துள்ளது. பிரபல இணைய தள சேவை நிறுவனத்தின் பெயரும் இதுதான் என்பது அந்த கிராமத்தினருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
பெங்களூரில் இருந்து 510 கி.மீ. தொலைவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ளது  கூகுள்  கிராமம். இன்டர்நெட் வசதியே இல்லாத இந்த குக்கிராமத்தின் மக்கள்தொகை 1,000. கிருஷ்ணா நதிக் கரையில் உள்ள முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள கிராமம் இது.
அங்கு உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனமான  கூகுள் பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியவில்லை. அது எங்கள் கிராமத்தின் பெயர் என்று பதில் அளிக்கின்றனர்.

இதுபற்றி பசவராஜப்ப கவுடா என்ற விவசாயி கூறுகையில்,  எங்கள் கிராமத்தின் பெயரில் யாரோ இணைய தள கம்பெனி தொடங்கியிருப்பதாக பேத்தி சொல்லி கேள்விப்பட்டேன்  என்றார். இதனால், எங்கள் கிராமத்துக்கு பெருமை என்றார் அவர். ஆனால், இந்த அளவுக்கு கூட மற்றவர்களுக்கு  கூகுள் இணைய தளம் பற்றித் தெரியவில்லை.  ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மவுன்டைன் வியூவில் உள்ள உலகின் நம்பர் ஒன் இணைய தள சேவை நிறுவனத்துக்கு கூகுள் என்று பெயர் வர காரணம், கர்நாடக கிராமமல்ல என்பது நிச்சயம். எனினும், கிராமத்துக்கு கூகுள் என்ற பெயர் வரக் காரணம் இருக்கிறது.

பழங்காலத்தில் சன்யாசி அல்லமா பிரபு என்பவர் பசவ கல்யாண் என்ற இடத்தில் இருந்து ஆந்திராவின் ஸ்ரீசைலம் நோக்கி செல்லும்போது இந்த கிராமத்தில் தங்கினாராம். அவர் தங்கிய குகைக்கு காவி கல்லு என்று பெயரிடப்பட்டது. நாளடைவில் அது கண்டபடி மருவி கூகல்லு என்று ஆகி விட்டதாம். அதையும் இப்போது சுருக்கி  கூகுள்  என்று கூறுகின்றனர். எனினும், கிராமத்தில் எங்கும் ஆங்கிலத்தில்  கூகுள்  இல்லை. ஆங்கிலம் கூடாது என்று மக்கள் போராடியதால், அரசு அலுவலக பெயர் பலகைகளில் கூட கன்னட மொழியில் மட்டுமே கூகுள் இருக்கிறது


--
www.thamilislam.co.cc

துபாய் பொருளாதார நெருக்கடி: 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

துபாய் பொருளாதார நெருக்கடி: 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் பணி நீக்கம் நோட்டீசு அனுப்பினர்
 துபாய், நவ. 30-
 
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் திடீர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன.
 
பொருளாதார நெருக்கடியால் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறுத்திவிட்டனர்.
 
இந்த பணிகளில் 60 லட்சம் பேர் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் 40 லட்சம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதில் 20 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 
இவர்களில் ஏராள மானோருக்கு அந்தந்த நிறுவனங்கள் ஏற்கனவே வேலை நீக்க நோட்டீசு அனுப்பி விட்டது. விடு முறையில் ஊருக்கு வந்து இருப்பவர்களுக்கு நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்களுக்கு இனி வேலை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி விடுகின்றனர்.
 
எனவே விடுமுறையில் வந்து இருப்பவர்கள் அனைவரும் வேலை பறி போய்விடுமோ என்று கலக்கத்தில் உள்ளனர்.
 
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாஜித் என்பவர் பக்ரீத்துக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரது இ மெயிலுக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.
 
அதில் உங்கள் வேலை காண்டிராக்டை ரத்து செய்து விட்டோம், வேலைக்கு வழங்கிய அனுமதியும் ரத்தாகி விட்டது. நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்கள் சம்பள பாக்கி, உங்கள் உடமைகள் அனைத்தும் தபால் மூலம் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இதுபற்றி சாஜித் கூறும் போது எங்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் தரவில்லை. இப்போது வேலையை விட்டே நீக்கி விட்டார்கள். எனது நண்பர் கள் பலருக்கும் இதே போல நோட்டீசு வந்துள்ளது. எங்கள் கனவெல்லாம் வீணாகி விட்டது என்றார்.
 
துபாயில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது அதிகமாக இருந்தது. சமீப காலமாக அது குறைந்து வந்தது. பொருளாதார நெருக்கடியும் முதலீடு கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails