Sunday, February 1, 2009

புதுக்குடியிருப்பு நரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது:
புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர்.
இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் சிறிலங்கா படையினர் பெருமளவிலானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மேலதிக விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

 

புலிகள் ஆதரவு முழக்கங்கள் : முத்துக்குமார் அஞ்சலி ஊர்வலத்தில் பொங்கிய ஈழ உணர்வு!

 
இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர்கள், திரைப்பட படைப்பாளிகள், மாணவர் அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள், சமுதாய அமைப்புகள், பத்திரிகையாளர்கள் என பலரும் பெருமளவில் பங்கேற்றனர்.

முத்துக்குமார் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் படங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி பல்வேறு அமைப்பினர் ஊர்வலத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழீழம் அமைந்தே தீரும் என்றும், ஈழம் வாழ்க என்றும், மேதகு பிரபாகரன் வாழ்க என்றும் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வழி நெடுகிலும் நின்று அஞ்சலி செலுத்திய பொதுமக்களில் பலரும் பிரபாகரன் படத்தை பிடித்திருந்தனர். குழந்தைகள் கைகளிலும் பிரபாகரன் படமும், புலிக்கொடியும் காணப்பட்டன.

இந்த காட்சிகளைக் கண்டும், முழக்கங்களை கேட்டும் மகிழ்ச்சியடைந்த ஈழ ஆதரவாளர்கள், முத்துக்குமார் விருப்பம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.

சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் புலிகள் ஆதரவு முழக்கங்கள் எழுப்பி சென்றனர். முத்துக்குமாரின் மரணத்திற்கு பிறகு ஈழ ஆதரவை வெளிப்படையாக மீண்டும் வெளிப்படுத்தியதை அதிகமாகக் காண முடிந்தது.

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233434744&archive=&start_from=&ucat=&

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails