Thursday, January 1, 2009

பங்குச் சந்தைகளில் கரடிகள் ஆதிக்கம் செலுத்திய 2008 ஆம் ஆண்டு

பங்குச் சந்தைகளில் கரடிகள் ஆதிக்கம் செலுத்திய 2008 ஆம் ஆண்டு

கவலையில் முதலீட்டாளர்கள்
கவலையில் முதலீட்டாளர்கள்

உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகள் காரணமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் 2008 ஆம் ஆண்டில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

லண்டன் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 31 சதவீதம் குறைந்தது. இது இச்சந்தையின் 24 ஆண்டுகால வரலாற்றில் மிக மோசமான சரிவாகும். அதே நேரத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் பங்குச் சந்தைகள் இதை விட கூடுதலான இழப்புக்களை சந்தித்துள்ளன.

பிராங்ஃபர்ட் பங்குச் சந்தை 40 சதமும், பாரிஸ் பங்குச் சந்தை 43 சதமும் வீழச்சி கண்டுள்ளது.

அதே போல ஆசியப் பங்குச் சந்தைகளும் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சுமார் 52 சதவீதமும், ஷாங்காயின் குறியீட்டு எண் 65 சதமும் குறைந்துள்ளன.
 
http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml

காசா போர் நிறுத்தம் தொடர்பான யோசனையை இஸ்ரேல் நிராகரித்தது

செய்தியறிக்கை
 
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது
காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன

காசா போர் நிறுத்தம் தொடர்பான யோசனையை இஸ்ரேல் நிராகரித்தது

காசாவில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரான்ஸின் யோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. தற்போதைய சூழல் உகந்ததாக இல்லை என்றும் போர் நிறுத்தம் என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் எகுத் ஒல்மார்ட் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீதான பாலத்தீன ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச கருத்தொற்றுமை இருப்பதாக அவர் கூறினார்.

எகிப்தின் தலைநகர் கைரோவில் நடந்த அரபு லீக்கின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், பாலத்தீனத்தில் உள்ள போட்டிக் குழுக்கள் தங்களுக்கிடையேயான வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஹமாஸ் சார்பில் பேசவல்ல ஒருவர், இந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முதலில் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
 
http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails