Thursday, May 1, 2008

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்


மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது
ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்


குவைத், ஏப்.30-

ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.

இவ்வாறு கர்சாய் கூறினார்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=409627&disdate=4/30/2008

Wednesday, April 30, 2008

கிறிஸ்தவ கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றாரா?பா.ஜனதா முதல்-மந்திரி கருத்து


கிறிஸ்தவ கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றாரா?
பா.ஜனதா முதல்-மந்திரி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு


போபால், ஏப்.30-

பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அவர் சென்றதாகவும், திகம்கார் மாவட்டத்தில் பழங்குடியின பெண் ஒருவருக்கு நிதி உதவி வழங்குவதாக உறுதி அளித்தாகவும், அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் இந்த தகவலை அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சூரி நேற்று மறுத்தார். ராகுல் காந்தி கிறிஸ்தவ கோவிலுக்கு செல்லவில்லை என்றும், விடுதியில் தன்னை பார்ப்பதற்காக காத்து நின்ற பள்ளிக்குழந்தைகளைத்தான் ராகுல் காந்தி சந்தித்தார் என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=409775&disdate=4/30/2008
 

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails