நம் ஆவணங்கள், செய்திக் குறிப்புகள், தகவல் அறிக்கைகளில் படங்கள் மற்றும் போட்டோக்களை இணைத்து தயாரிக்க விரும்புவோம். சரியான போட்டோக்களுக்கும் படங்களுக்கும் எங்கு செல்வது? என்ற கேள்வியோடு, இணையத்தைச் சுற்றி வந்த போது ஒரு தளம் கவனத்தைக் கவர்ந்தது.http://www.publicdomainphotos.com/ என்ற முகவரியில் உள்ள அந்த தளத்தில் 5,000 க்கும் மேற்பட்ட போட்டோக்களும், அதிகமான எண்ணிக்கையில் கிளிப் ஆர்ட் படங்களும் கிடைக்கின்றன. புகைப்படங்களைத் தேடிப் பெறுவதற்கு மிக எளிமையான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் போட்டோக்கள் வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் காட்டப் படுகின்றன. தேவைப்படும் போட்டோவிற்கான பிரிவில் கிளிக் செய்தால், படங்களின் முன் தோற்றக் காட்சிகள் கிடைக்கின்றன. பின் விரித்துப் பார்த்து நம் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். மிருகங்கள், கட்டடங்கள், நகரங்கள், பானங்கள், பூக்கள், உணவு, தோட்டம், பூச்சி வகைகள், உள் அலங்கார அமைப்பு, புல்வெளிகள், விளக்குகள், தாவரங்கள் என போட்டோ வகை பட்டியல்கள் நீள்கிறது. இந்த பிரிவுகளுக்குத் துணைப் பிரிவுகளும் கிடைக்கின்றன. இதனால் நம் தேடல் குறுக்கப்பட்டு நம் தேவைகளை எளிதாக நிறைவேற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, landscapes என்னும் பகுதியில் fields, forests, lakes, mountains, roads, and sky என அதன் வகைகள் விரிகின்றன. ஒருமுறை சென்று பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
Wednesday, June 29, 2011
இந்த வார இலவச இணைய தளம்
நம் ஆவணங்கள், செய்திக் குறிப்புகள், தகவல் அறிக்கைகளில் படங்கள் மற்றும் போட்டோக்களை இணைத்து தயாரிக்க விரும்புவோம். சரியான போட்டோக்களுக்கும் படங்களுக்கும் எங்கு செல்வது? என்ற கேள்வியோடு, இணையத்தைச் சுற்றி வந்த போது ஒரு தளம் கவனத்தைக் கவர்ந்தது.http://www.publicdomainphotos.com/ என்ற முகவரியில் உள்ள அந்த தளத்தில் 5,000 க்கும் மேற்பட்ட போட்டோக்களும், அதிகமான எண்ணிக்கையில் கிளிப் ஆர்ட் படங்களும் கிடைக்கின்றன. புகைப்படங்களைத் தேடிப் பெறுவதற்கு மிக எளிமையான வழி ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் போட்டோக்கள் வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் காட்டப் படுகின்றன. தேவைப்படும் போட்டோவிற்கான பிரிவில் கிளிக் செய்தால், படங்களின் முன் தோற்றக் காட்சிகள் கிடைக்கின்றன. பின் விரித்துப் பார்த்து நம் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். மிருகங்கள், கட்டடங்கள், நகரங்கள், பானங்கள், பூக்கள், உணவு, தோட்டம், பூச்சி வகைகள், உள் அலங்கார அமைப்பு, புல்வெளிகள், விளக்குகள், தாவரங்கள் என போட்டோ வகை பட்டியல்கள் நீள்கிறது. இந்த பிரிவுகளுக்குத் துணைப் பிரிவுகளும் கிடைக்கின்றன. இதனால் நம் தேடல் குறுக்கப்பட்டு நம் தேவைகளை எளிதாக நிறைவேற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, landscapes என்னும் பகுதியில் fields, forests, lakes, mountains, roads, and sky என அதன் வகைகள் விரிகின்றன. ஒருமுறை சென்று பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
Tuesday, June 28, 2011
ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது!
http://thamilislam.tk
Monday, June 27, 2011
இலங்கைக்கு எதிராக தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி
--
http://thamilislam.tk
Sunday, June 26, 2011
iPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்
iPhone வாங்கித்தருபவருக்கு எனது கற்பு இலவசம்-சீன யுவதி அதிரடி!
June 26, 2011
சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த தயாரிப்புக்களை வாங்குகின்றமைக்காக மிகவும் பாரதுரமான தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.
ஐ போன் ஒன்றுக்காக கற்பை பண்டமாற்று செய்ய முன் வந்து உள்ளார் கட்டிளம் யுவதி ஒருவர். இவருடைய இலட்சியக் கனவு ஐ போன் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது. ஆனால் இவரது தகப்பன் ஐ போன் வாங்கிக் கொடுக்கின்றார் இல்லை.
சீனாவின் சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்று வெய்போ ஐ போனை தரக் கூடிய எவரேனும் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றமைக்கு தயார் என்று வெய்போ மூலமாக அறிவிப்பு விடுத்து உள்ளார். அடிப்படைத் தகவல்களுடன் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்து உள்ளார். 1990 களில் பிறந்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார். இவரது அறிவிப்பு இணைய மற்றும் ஊடக உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இவரது அறிவிப்புக்கு வெய்போ சமூக இணைப்பு இணையத் தள பாவனையாளர்களிடம் இருந்து வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கற்பு என்பது விலை மதிப்பற்றது , ஐ போன் ஒன்றுக்காக இழக்கப் பட வேண்டியது அல்ல என்பது கண்டனங்களின் அடிப்படையாக உள்ளது.
சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது பையன் ஒருவர் ஐ பாட் , ஐ போன் ஆகியவற்றை வாங்குகின்றமைக்காக ஒரு சிறுநீரகத்தை விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
source:viyapu
--
http://thamilislam.tk
Friday, June 24, 2011
மைக்கேல் ஜாக்சனின் சகோதரி அதிர்ச்சி தகவல் வெளியீடு
நியூயார்க்: யானை இறந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்து வதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.
அத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் உலகம் முழுவதும் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். கலிபோர்னியாவில் அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன்இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார்.தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும்அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.
மக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர்இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம்இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
source:dinamalar
--
http://thamilislam.tk
Wednesday, June 22, 2011
சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொள்ளும் கனிமொழி
புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, ஓய்வு நேரத்தில் மெழுகுவத்தி செய்ய கற்றுக்கொள்வதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், புத்தகங்களை படிப்பதில் நேரத்தை கழித்து வந்தார். இந்நிலையில், தற்போது, தன் ஓய்வு நேரங்களில், பெண் கைதிகளோடு இணைந்து மெழுகுவத்தி தயாரிக்கும் முறையை கற்று வருவதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது ஜாமின் மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட போதும், அதுகுறித்து எந்தவித வருத்தமும் அடையாமல் சிறையில் இயல்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம், கனிமொழியின் தந்தை கருணாநிதியும், தாயார் ராஜாத்தியும் சிறைக்கு வந்து, கனிமொழியை சந்தித்தனர். அப்போது, அவருக்குப் பிடித்தமான முறுக்கு உள்ளிட்ட உணவுப் பண்டங்களை கொடுத்துவிட்டுச் சென்றனர்.
--
http://thamilislam.tk
தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்
--
http://thamilislam.tk
Tuesday, June 21, 2011
அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக்கு இலவச தமிழ் வேதாகமம்
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" எனச் சொல்லி உலகத்திற்கு ஒளியாய் வந்த இயேசுகிறிஸ்துவை இன்னும் அறியாதவரா நீங்கள்?
மறுபடியும் பிறந்த அனுபவம் இன்னும் இல்லாத நண்பரா நீங்கள்?
கிறிஸ்தவ மார்க்கத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களல்லாத ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தை பற்றி மேலும் அறிய விரும்பும் தமிழ் நண்பர்களுக்கு இலவசமாக தமிழ் வேதாகமங்களை பரிசளிக்க விரும்புகிறோம்.
கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்பினால் மேற்கொண்டு விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.
thewayofsalvation@yahoo.com
இத்தகவலை கிறிஸ்தவரல்லாத உங்கள் மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
From "The way of salvation" ministry we are glad to issue free tamil bibles for non Christians /non believers who are interested in learning more about Jesus Christ.
Right now we are taking requests only from residents of USA and Canada.
Please send us a email at
thewayofsalvation@yahoo.com
We will contact you with further information.
Please share this information with your non-christian tamil friends.
God bless you all.
source:.thewayofsalvation
http://thamilislam.tk
டில்லி திகார் சிறையில் கருணாநிதி;!!
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான, கனிமொழி ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, திகார் சிறையிலிருக்கும் மகளை சந்திப்பதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இன்று காலை 8.30மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார்.
சுப்ரீம் கோர்ட்டில், கனிமொழியின் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் அறிந்த கருணாநிதி, மிகுந்த மனவேதனை அடைந்தார். முன்னாள் அமைச்சர்களை, கோபாலபுரம் வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். பின், சிறையிலிருக்கும் மகளை சந்திக்க டில்லி செல்ல முடிவு செய்தார். நேற்று, நிருபர்களை சந்திப்பதை தவிர்த்தார். கருணாநிதி, இன்று காலை, 8.30 மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, கருணாநிதிபி.ஏ.சண்முகநாதன், தலைமையிடத்து செயலாளர்காஜாமொகைதீன் மற்றும் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பாண்டியன், வினோதன், கணேசன்,டாக்டர் பிரவீன் உதவியாளர் நத்தியானந்தம் உட்பட10 பேர் செல்கின்றனர்.
டில்லி செல்லும் கருணாநிதி, தனியார் ஓட்டலில் தங்குகிறார். திகார் சிறைக்கு சென்று, மகள் கனிமொழியை சந்தித்து பேச உள்ளார். மகளை வெளியில் கொண்டு வர, அடுத்து என்ன செய்வது என, சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்திருப்பதாகவும், அவர் திரும்பி வரும் தேதி முடிவாகாததால், ஓரிரு நாட்கள் டில்லியிலே தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.
source:dinamalar
--http://thamilislam.tk
Monday, June 20, 2011
சீனாவின் அட்டூழியம்
இமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.
பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.
சீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை.
--
http://thamilislam.tk
Friday, June 17, 2011
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம்
விஜயலட்சுமி விவகாரத்தில் சிக்கியிருக்கும் டைரக்டர் சீமான் பேசுவதற்காக மைக்கை பிடித்ததும், விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் சீரியஸாக கேட்க ஆரம்பித்தனர். ஆனால் சீமானோ காமெடியாக பேசினார். அதிலும் நடிகர் விஜய் பற்றிய பேசிய பேச்சை கேட்டதும் அரங்கத்தினுள் ஒரே கிச்சு கிச்சு. சீமான் பேசும்போது, தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது, என்றார்.
தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தயங்கி, தனது அப்பாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தவர் விஜய். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை தர மாட்டார்; பேட்டி கொடுக்க மாட்டார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இரு மாதங்களுக்கு முன்பு பலமுறை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதேப்போலவே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை இப்படியிருக்க... டைரக்டர் சீமானோ... ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசியிருப்பது... அதுவும் ரொம்பவே சீரியஸாக பேசியிருப்பது சரியா? தவறா? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்
Wednesday, June 15, 2011
காப்பாற்றப்பட்ட தமிழகம்:ரஜினி கொடுத்த வாய்ஸ் சிங்கப்பூரில் இருந்து............
சென்னை: "முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
source:dinamalar
--http://thamilislam.tk
Tuesday, June 14, 2011
மைசூர் நகருக்குள் யானை அட்டகாசம்(படம் இணைக்கப்பட்டுள்ளது)
மைசூர் நகருக்குள் இரண்டு யானைகள் அட்ட்காசம் செய்தன.ரோட்டில் சென்ற வாகனங்கள் ,மனிதர்கள்,கால்நடைகள் எல்லாவற்றையும் துவசம் செய்தது.அந்த சம்பவத்தில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Mad Elephant
In India, two elephants broke into a suburb of the city of Mysore, in the southern Indian state of Karnataka. They emerged from the woods and become like a mad destroy everything in its path. They attacked the livestock grazed the cars going by and tried to trample the people who stand in their way. Three hours of elephants held in h0rror the whole town, until they had no effect tranquilizer. 05 More images after the break...
--
http://thamilislam.tk
Sunday, June 12, 2011
தமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
இந்த பிரவுசர் வெளியான போது, மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 1990 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்க,
Friday, June 10, 2011
பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை
| |
ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது... 1. `நாம கொஞ்சம் பேசணும்' உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும். `ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்' என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார். `பேசுவது' எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும். பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள். எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது. 2. `நீங்க அம்மா பையன்' பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க... உங்க அம்மா இப்படிப் பண்றாங்க', `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்' என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை. பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை... உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு' என்று கூறுவதையும் விரும்புவதில்லை. பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும். 3. `உங்க நண்பரைப் பாருங்க' `உங்க நண்பரைப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா...' என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள். இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை'யே காதலிச்சிருக்கலாம்' அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்' என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும். பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும். கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும். 4. `நீங்க எப்பவும் இப்படித்தான்... திருந்தவே மாட்டீங்க' முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை. ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்' என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும். அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும். மாறாக, நொந்த வேளையில் `லந்து' செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்...' என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல...' என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை. 5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு' மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை' என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை' அடிச்சுட்டு வாங்க' என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். `கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே... இப்போ தடியிடையா ஆயிட்டே...' என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா? source;viyappu |
http://thamilislam.tk
அங்கன்வாடி ஊழியரின் மகளுக்கு அமெரிக்க பல்கலையில் படிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா தர்வேஷ் (20). நெல்லை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.
கடந்த ஆண்டு பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகத்தினர் நடத்திய ஆங்கில பேச்சு போட்டியில், "ஜனநாயகம்' என்ற தலைப்பில் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பி, அதில் சில விமர்சனங்களை சொல்லச்செய்தனர். அதையும் சிறப்பாக செய்த மாணவி ஹலிமாவை அமெரிக்க அரசின் செலவில் 10 மாதங்களுக்கு வடக்கு அலபாமா பல்கலையில் கலாச்சாரம் மற்றும் கம்ப்யூட்டர் கல்விக்கு தேர்வு செய்தனர். மாதம் சுமார் ரூ.12 ஆயிரம் ஊதியத்துடன் தங்கும் வசதி, உணவுடன் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
10 மாத படிப்பிற்கு பின், தற்போது நெல்லை வந்துள்ள மாணவி ஹலிமா தர்வேஷ் கூறியதாவது: மிகவும் பின்தங்கிய பகுதியில் வளர்ந்த நான் சிறுவயதில் நன்றாக படித்தேன்.என் தந்தை தர்வேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக இருந்தார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அப்பாவின் மரணத்தால், குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. உறவினர்களின் செலவில் மேலப்பாளையம் பெண்கள் கல்லூரிக்கு பயில வந்தேன். அப்போது தான் அமெரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனியாக என்னை அமெரிக்கா அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை என்றாலும், கல்வி கற்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதற்காக அனுப்பி வைத்தார். கடந்த 10 மாதங்களாக அமெரிக்காவில் நிறைய கற்றுக்கொண்டேன். நவீனமுறையில் கற்றுக்கொடுத்தல், கம்ப்யூட்டர் துறையில் நாம் 5 ஆண்டுகளுக்கு பின்பு படிக்கும் விஷயங்களை அங்கு உடனுக்குடன் கற்றுத்தருகிறார்கள். என்னைப்போலவே ஜோர்டான், இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 88 பேர் அங்கு பயின்றோம்.
பெற்றோரின் பிரிவு தெரியக்கூடாது என்பதற்காக ஹேஸ்டிங்க்ஸ் தம்பதியினர் என்னை குழந்தையாக தத்தெடுத்துக் கொண்டு உதவிகள் புரிந்தார்கள். மாதாமாதம் அமெரிக்கா தந்த உதவித்தொகையை, எங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடிந்த பிறகு வீட்டின் தேவைக்காகவும் 11ம் வகுப்பு பயில உள்ள தங்கை ரிஸ்வானாவிற்காகவும் நான் ஏதாவது வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., படிப்பேன், என்றார்
source:dinamalar
--
http://thamilislam.tk
Wednesday, June 8, 2011
சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ?
அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் அதனைக் கட்டும்ப்படுத்தும் முறைகள் என்ன ?
1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது ?
நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா ?
இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70௮0% அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் உடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன.
அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.
2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா ?
திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.
உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.
3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா ?
அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3௪ முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.
source:athirvu
--http://thamilislam.tk
இலங்கைத் தமிழர்கள் :முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை:
முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை: தமிழ் நாடு சட்ட மன்றில் தீர்மானம் !
மகிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளி எனத் தெரிவித்த ஜெயலலிதா, இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடையைக் கொண்டுவரவேண்டும் எனக் கோரி தமிழக சட்ட மன்றில் இன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இத் தீர்மானத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
அதன் விவரம் வருமாறு:-
தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும். இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.
பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியவர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.
எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. எனக் குறிப்பிட்டுத் தீர்மானத்தை முன் வைத்தார்.
இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஶ்ரீலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு சாதகமாகக் காய்நகர்த்திய திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அதிமுக தலைமையடன் நெருக்கம் பேண மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு பெருமுயற்சி எடுத்து வரும் நிலையில், தமிழகத்தின் புதிய அரசு சட்டசபையில் இத் தீர்மாணம் நிறைவேற்றியிருப்பது முக்கியமானது எனக் கருதப்படுகிறது.
மேலும், இலங்கை போர்க்குற்ற விசாரணைகளுக்கு இந்தியா ஆதரவில்லை என அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கும் அதே தினத்தில் தமிழக அரசு இந்த தீர்மாணம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
source:athirvu
--
http://thamilislam.tk
Tuesday, June 7, 2011
இலங்கைப் பூசாரி செக்ஸ் ஆசை
இலங்கைப் பூசாரி செக்ஸ் ஆசை: கம்பி எண்ணும் நிலையில் !
இலங்கையைச் சேர்ந்த பூசாரி ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்டதாக அவுஸ்திரேலியாவில் கைதாகியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பூசகரான பிரேம்காந்தன் ராஜரட்ண சர்மா, Carrum Downs என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் பணிபுரிந்துள்ளார். 2004 ம் ஆண்டு அளவில் ஆலயத்துக்கு பூசைக்குச் சென்ற 23 வயதுடைய பெண் சில சங்கடங்களில் இருந்தாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட இப் பெண்ணின் பிரச்சனைகளை தான் தீர்த்துவைப்பதாகக் கூறி, முதலில் ஜோசியம் பார்க்கவேண்டும் எனச் சொல்லி, அவர் அப் பெண்ணை தனியான அறை ஒன்றுக்குள் கொண்டுசென்று, தவறான செயலில் ஈடுபட்டுள்ளார். இதே போல 2009ம் ஆண்டு தன்னோடு தவறாக நடக்க முயற்சித்ததாக மேலும் ஒரு பெண் அவுஸ்திரேலியப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
இவ்விரு பெண்களும் கொடுத்த புகார்களில் பூசாரி பற்றிச் சொல்லப்பட்ட விடையங்கள் ஒற்றுமையுடன் காணப்பட்டதால், பொலிசார் பூசாரியைக் கைதுசெய்து விசாரணை நடத்தியுள்ளனர். 2009ம் ஆண்டு பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்ணை பூசாரி பலவந்தமாக முத்தமிட முனைந்துள்ளார் என அரச தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். பிரேம்காந்தன் ராஜரட்ண சர்மாவின் வக்கீல் பேசும்போது, பிரதிவாதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அவரை நாடு கடத்தவேண்டாம் எனத் தெரிவித்தார். குற்றவாளி குற்றங்களை ஒப்புக்கொள்வதாகாவும் வக்கீல் மேலும் தெரிவித்தார்.
ஆனால் பிராங்ஸ்டன் மஜிஸ்திரேட் நீதிபதி அதனை ஏற்க மறுத்திவிட்டார். ஒரு குருக்கள் அல்லது மத போதகர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சர்மா கெடுத்துவிட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 18 மாத சிறைத் தண்டணை வழங்கித் தீர்பளித்துள்ள பிராங்ஸ்டன் மஜிஸ்திரேட் நீதிபதி, ஆண்மீகத்தில் அல்லது பொது இடங்களில் பூஜைகளில் ஈடுபட அவருக்கு 2 வருடத்துக்கு தடை விதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்
source:athirvu
--
http://thamilislam.tk