மாநில அரசு விருது பெறும் அளவுக்குத் தரமான திரைப்படத்தைத் தயாரித்து சாதனை புரிந்திருக்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்த கிராம மக்கள்.
கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணபுரம் பஞ்சாயத்து கிராமத்தினர்தான் அவர்கள்.
இவர்கள் தயாரித்த `கலியொருக்கம்' என்ற படத்துக்கு 2007-ம் ஆண்டுக்கான `சிறந்த குழந்தைகள் படத்துக்கான விருது' கிடைத்துள்ளது. கடந்த 8-ம் தேதì இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தங்கள் முதல் முயற்சியிலேயே விருது பெற்றதில் கிராம மக்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
கண்ணபுரம் பஞ்சாயத்து தலைவரான கே.வி. ஸ்ரீதரன் கூறுகையில், ``ஒரு மேம்பாட்டு முனëமுயற்சியாக இந்த படம் தயாரிப்பு வேலையில் நாங்கள் இறங்கினோம். வழக்கமாக எல்லா பஞ்சாயத்துகளையும் போல பாலங்கள், சாலைகள் அமைப்பது போன்ற மேம்பாட்டுப் பணிகளில்தான் நாங்களும் கவனம் செலுத்துவோம். கலைத் துறையைப் பற்றியும், நாமும் ஒரு படம் தயாரிப்போம், அதற்கு மாநில விருது கிடைக்கும் என்றும் நாங்கள் நினைக்கவே இல்லை. மாநிலதëதில் நடைபெற்ற பல விழாக்களிலும் இந்தப் படத்துக்கு விருதுகள் கிடைத்திருக் கின்றன'' என்றார்.
படத்தின் இயக்குநரான எஸ்.சுனில் கூறுகையில், ``நாங்கள் முதலில், திரைப்பட விமர் சனக் கலை குறித்த ஒரு பயிற்சிப் பட்டறையை குழந்தைகளுக்கு நடத்தலாம் என்றுதான் நினைத்தோம். அதற்கு ஆர்வத்துடன் 165 குழந்தைகள் வந்துவிட்டார்கள். இடவசதி போன்றவை காரணமாக 30 குழந்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்தோம். முதலில் இந்தப் பயிற்சிப் பட்டறையை விடியோ கேமிராவில் படம் பிடிப்பதாகத்தான் திட்டம். அப்புறம்தான், கேரள திரைப்பட மேம்பாட்டுக் கழகம் வழங்கும் மானியத் தொகையைப் பெற்று ஏன் நாமே ஒரு படம் தயாரிக்கக் கூடாது என்று யோசித்தோம். அதன் அடிப்படையில் இந்தப் படம் உருவானது. இப்படத்துக்குச் செலவான மொத்த தொகை 9 லட்ச ரூபாய்'' என்றார்.
இனëறைய நவீன காலத்தில் குழந்தைகள் எப்படி நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் என்று விவரிக்கிறது இந்தப் படம். கிராமத்துச் சிறார்கள் சிலர் கோடை விடுமுறையில் விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் தவிக்கின்றனர். முடிவில், அவர்களாகவே ஒரு மைதானத்தை உருவாக்குவது எனëறு முடிவெடுத்து வேலைகளில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்று விடுகின்றனர். ஆனால் மைதானம் தயாரான நிலையில் கிராமத்துப் பெரியவர்கள், அங்கே விளையாடக் கூடாது, அது கிராமத்துகëகுச் சொந்தமான இடம் என்று தடுத்து விடுகìனëறனர். இப்படி முடிகிறது அந்தப் படம்.
கோடி கோடியாய் கொட்டி மசாலா மலைகளாய் உருவாக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ஓர் அர்த்தமுள்ள திரைப்படத்தை உருவாக்கிய கிராமத்தவர்கள் பாராட்டுகëகுரியவர்கள் தான்!
***
http://www.dailythanthi.com/magazines/nyayiru_titbits.htm