Wednesday, August 28, 2013

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா தலைத்துணிகளின் மருத்துவப் பிரச்சினை

 

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று சில இஸ்லாமிய ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். 

குறைந்தது ஹிஜாப் (தலைத்துணி) அணியுங்கள் என்று அடுத்த நிலை ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். 

கூடவே பெற்றோர்களும் தன் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆண்கள் இந்த பர்தாவையோ ஹிஜாபையோ அணிவதில்லை. அப்படி அணிவதுதான் அராபிய வாழ்க்கைப் பழக்கம். காரணம் பாலைவனச் சூரியன் மற்றும் கொடு மணல் காற்று என்று பலரும் அறிவார்கள்.

இது இப்படி இருக்க, பர்தா ஹிஜாப் அணிவதால் ஏற்படும் மருத்துவத் தொல்லை என்ன என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கனடா போன்ற குளிர் நாடுகளில், சூரிய ஒளி மிகவும் குறைவு. சூரிய ஒளி குறைவு என்பதால், விட்டமின் டி உடலில் குறையும். இதனால் மன அழுத்தம், மன உளைச்சல், அவசியமற்ற துக்கம், கண்ணீர் என்பவையெல்லாம் பீடிக்கும்.

கனடாவில் சுத்தமாகவே சூரிய ஒளி இல்லை என்று இல்லை, தமிழ்நாட்டை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 25 விழுக்காடு சூரிய ஒளி உண்டு. 

ஆனால் அந்த சூரிய ஒளி உடம்பில் படவிடாமல், முஸ்லிம் பெண்கள் ஆடை அணிந்தால் என்னாகும்? விட்டமின் குறைவினால் பாதிக்கப்படுவார்கள்.

மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு, எரிச்சல், துக்கம், கண்ணீர் காரணமாக குடும்பத்தில் சண்டை வரும். பெண்கள் சிடுசிடுவென்றும், எதிர்ப்பு காட்டும் மனோ நிலையிலும், அன்பை இழந்தவர்களாகவும் காணப்படுவார்கள். 

இதனால் குடும்பப் பிரச்சினை விவாகரத்து வரை செல்லவும் வாய்ப்புகள் உண்டு.

எந்த உடை எங்கே சரியோ, அந்த உடையைத் தேர்வு செய்து அணிவதே அறிவுடைமை. 

உலகில் பெரும்பாலானோர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவே ஆடை அணிவார்கள். அப்படித்தான் முஸ்லிம் ஆண்கள் ஆடை அணிகிறார்கள். 

ஆனால் பாவம் முஸ்லிம் பெண்களுக்குத்தான் அந்த உரிமை கொடுக்கப் படுவதில்லை. 

அவர்கள் இந்த மருத்துவக் குறைபாட்டுக் ஆளாகிறார்கள். அதில் அவர்கள் மட்டுமே கஷ்டமும் நஷ்டமும் படவில்லை, குழந்தைகள் கணவன் குடும்பம் என்று எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள் நஷ்டப்படுகிறார்கள்


--
http://thamilislam.tk

Tuesday, August 27, 2013

நபிவழியை உண்மை படுத்தும் உலக நடப்புகள்

http://iraiyillaislam.blogspot.in/2012/12/blog-post_27.html


முத்துக்குளிக்க வாரீகளா…! முத்ஆ செய்ய வாரீகளா..!


சிறுமிக்கு நிகழ்ந்த அநீதி: கேரளா முழுவதும் அதிர்ச்சி


திருவனந்தபுரம்:கேரளாவைச் சேர்ந்த, 17 வயது முஸ்லிம் சிறுமியை, அரபு ஷேக் ஒருவன் மணந்து, 17 நாட்களில் புறக்கணித்த விவகாரம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இதுபோன்ற திருமணங்கள் நடக்காமல் தடுக்க, தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என, சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.





17 நாள் குடித்தனம்:



கோழிக்கோடு பகுதியில் செயல்படும், முஸ்லிம் அனாதை இல்லத்தில், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சிறுமி, 4 வயது முதல் தங்கியிருந்தார். தற்போது, 17 வயதாகும் அந்தச் சிறுமியை, கடந்த ஜூன் மாதம், 13ம் தேதி, அரபு ஷேக் ஒருவர், முஸ்லிம் முறைப்படி மணந்து, சவுதி அரேபியா அழைத்துச் சென்று, 17 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.மாநில குழந்தைகள் கமிஷனை நேற்று முன்தினம் அணுகிய அந்தச் சிறுமி, தன்னை வலுக்கட்டாயமாக, ஷேக்குடன் திருமணம் செய்து வைத்த, அனாதை இல்ல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலீசில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.நீண்டகாலமாகவே இத்தகைய கொடுமையான சம்பவங்கள், அந்தப் பகுதியில் நடைபெற்று வருவது, இந்தச் சம்பவம் வெளியானதை அடுத்து பலருக்கும் தெரிய வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் இது போன்றதொரு சம்பவம், பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. படித்தவர்கள் நிறைந்த கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில், குறிப்பாக, மலபார் பகுதியில், இதுபோன்ற கொடுமைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு, அம்மாநில சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

படித்தவர் நிறைந்த மாநிலம் :



மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.கே.ஸ்ரீமதி இது குறித்து கூறுகையில், ""படித்தவர்கள் நிறைந்த கேரளாவில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை, ஏற்றுக் கொள்ளவே முடியாது. சம்பந்தப்பட்ட அனைவரும், தண்டிக்கப்பட வேண்டும். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், ஆளும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர், பிந்து கிருஷ்ணா கூறும் போது, ""தொண்டு நிறுவனங்களும், அனாதை இல்லங்களும் கருணையோடு நடந்து கொள்ளும் என, பொதுவான கருத்து நிலவும் நேரத்தில், பணத்திற்காக, அப்பாவி சிறுமி, வெளிநாட்டைச் சேர்ந்தவனுக்கு திருமணம் செய்யப்பட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ளதை ஜீரணிக்கவே முடியாது,'' என்றார்.இதுபோல், பல சமூக அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், கோழிக்கோடு அனாதை இல்ல சிறுமி திருமண விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


--
http://thamilislam.blogspot.in
Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails